கடந்த 18-08-2012 ம் திகதி இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில் 'லெஸ்டர் ரமதான் வானொலி' நடத்திய அல் குர்ஆனை அழகுற ஓதும் போட்டியில் மூன்றாம் இடத்தை
பெற்றதன் மூலம் எமது அபிமானத்துக்குரிய மர்யம் இஸ்மாயில் அவர்கள் மீண்டும் எமது ஊருக்கு
பெருமை சேர்த்துள்ளார்.
எழுபதுக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டமையும், ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான
முஸ்லிம்களையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜும்ஆ பள்ளிவாயல்களையும் சுமார் அறுநூறு இலங்கை
முஸ்லிம்களையும் கொண்ட நகரமே லெஸ்டர் மாநகரம் என்பதும் இங்கே அவதானிக்கத்தக்கது.
பெருநாள் தின இரவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது பெறுமதி மிக்க IPod Nano ஒன்றைப் மர்யம் இஸ்மாயில்
பரிசாகப் பெற்றுக் கொண்டார். ஆரவாரமின்றி தனது
இளம் பருவத்திலேயே பல வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்தும் மர்யம் இஸ்மாயிலை இந்த
சந்தர்ப்பத்தில் நாமும் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
மடவள பஸார் கள்வீட்டைச் சேர்ந்தவரும் மடவள
மதீனா தேசிய பாடசாலை மற்றும் பேருவள ஜாமியா நளீமியாவின் பழைய மாணவருமான அஷ் ஷெய்க்
முஹம்மது இஸ்மாயில் அப்துல் மனாப் (நளீமி,பீ. ஏ), பேருவள சீணங் கோட்டை பாதிமா ரிப்தா முஹம்மது நஜாத் (பீ
கொம்)ஆகியோரின் மூத்த புதல்வியே மர்யம் ஆகும்.
எமது பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் மீண்டுமாய் இணைத்துக் கொள்கிறோம்.
தகவல் : இங்கிலாந்திலிருந்து பதியுஸ் ஸமான், முன்னாள் பிரதி ஆசிரியர், தினகரன்
No comments:
Post a Comment