இங்கிலாந்தில் தேசிய சிறுவர் போட்டியில் ஐம்பத்தி ஐந்து
பதக்கங் களைப் பெற்று சாதனைகள் நிகழ்த்திய .மடவள பசார் மாணவ மாணவிகள்.
தகவல்: முஹம்மது பவ்ஸ்,ஷிப்லி உவைஸ்,
ஆக்கம்: முஹம்மது இஸ்மாயில்
நளீமி,
'வளரும் பிள்ளைகளிடத்தில் நம்பிக்கையை கட்டி எழுப்புதல்' என்ற இலாட்சினையைத் தாங்கி இங்கிலாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சிறார்களுக்கு மத்தியில் வருடம் தோறும் நடை பெரும் தேசிய சிறுவர் போட்டிகளில் எமது ஊரைச் சேர்ந்த பல சிறார்கள் பல போட்டிகளிலும் தமது அபார திறமைகளைக் காட்டி பல பதக்கங்களை வென்றதன் மூலம் எமது ஊருக்கு மீண்டும் பெருமை தேடித் தந்துள்ளார்கள்.
அல்குர்ஆனை அழகுற ஓதுதல், அன்றாட துஆக்களை அழகுற ஓதுதல், அரபு மொழியில் இஸ்லாமிய கீதம், இஸ்லாமிய ராப் பாடல், பேச்சுப் போட்டி,தொலைக் காட்சி அறிவிப்பாளர் போட்டி, அரபு எழுத்தணி,கட்டுரை ,கவிதை மற்றும் விஷேட திறமைகள் என பத்து வகையான போட்டிகள் பாடசாலை கற்கை ஆண்டின் அடிப்படையில்ஐந்து குழுக்களாக பிரிக்கப்
பட்ட சிரார்களுக்கிடைய்யில் நடை பெற்றன. முதல் சுற்று 25/01/2015 இலும் இரண்டாம் சுற்று 08/02/2015 இலும் மூன்றாவது (இறுதி) சுற்று 07/03/2015 இலும், பரிசளிப்பு விழா
11/04/2015 இலும் மிக சிறப்பாக நடை பெற்றன.
எமது ஊர் சிறார்கள் மொத்தம் ஐம்பத்தி ஐந்து
(25 தங்கம், 22 வெள்ளி, 8 வெண்கல) பதக்கங் களைப் பெற்றுக் கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களின் விபரங்களை அவர்கள் பெற்றுக் கொண்ட தங்கம் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களின் எண்ணிக்கை ஒழுங்கில் பார்க்க!
Name of the student
No of Trophies
No of Gold, Silver, Bronze
1. Ayyub Mohamed Ismail
7 trophies
(7Gold)
2. Maryam Mohamed Ismail 6
trophies
(4 Gold, 2 Silver, )
3. Adnaan Rifan FAIZ
4
trophies
(2 Gold, 2 Silver)
4. Aneeqa Usman
4
trophies
(2 Gold, 1 Silver, 1 Bronze)
5. Haajar Mohamed Ismail
3
trophy
(3 Gold)
6. Aadhila Asry
3 trophies
(2
Gold, 1 Bronze)
7. Rishma Mohamed Thaslim 3 Trophies (1
Gold, 2 Silver)
8. Zaid Mohamed Kiyas
3
trophies
(1 Gold, 1 Silver, 1 Bronze)
9. Husna Mohamed Rifas
3 trophies
(3 Silver)
10. M Hamza Irshad
3 trophies
(2 Silver, 1 Bronze)
11. Salma Ali 3
tropies (2 Silver 1
Bronze
12. Aysha Anfas
2 trophies (1Gold, 1 Silver)
13. Azka Asry
2
trophy (1Gold, 1 Silver)
14. Aasif Thashrif
2
trophies (2 Silver)
15. Rifath Rashad
2
trophies (1
Silver, 1Bronze)
16. Bilaal Shibly
2 trophies
(1Silver, 1Bronze)
17. Ayman Rifan 1
Trophy
(1Gold)
18. Shihan Rihan 1 Trophy (1 Silver)
19. Moosa Shibly
1 trophy (1 Bronze)
அல்குர்ஆனை அழகுற ஓதுதல்,
Gold, Silver Bronze
3 5 3
அன்றாட துஆக்களை அழகுற ஓதுதல்,
Gold, Silver Bronze
6 8 2
அரபு மொழியில் இஸ்லாமிய கீதம்,
Gold,
Silver Bronze
3 3 2
இஸ்லாமிய ராப் பாடல்
Gold, Silver Bronze
1 0 0
பேச்சுப் போட்டி,
Gold,
Silver Bronze
3 0 0
தொலைக் காட்சி அறிவிப்பாளர் போட்டி,
Gold, Silver Bronze
0 1 0
அரபு எழுத்தணி,
Gold, Silver Bronze
3 0 0
கட்டுரை Gold,
Silver Bronze
4 2 2
கவிதை
Gold,
Silver Bronze
2 3 0
இவ்வருடம் இலங்கை முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் அடிப்படையில் வகுக்கப் பட்ட பத்து வட்டாரங்களில் நடை பெற்ற போட்டிகளில் மொத்தம் 280 சிறார்கள்
கலந்து கொண்டனர்.மேலும் சூப்பர் ஹீரோ என்ற தலைப்பில் 37 முன் பள்ளி (Pre
school) சிறார்களுக்கும் திறமைகளைக் காடுவதட்கான வாய்ப்புகள் இவ்வருடம்
வழங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு குறிப்பிடத்தக்க
அம்சமாகும்.
சிறி லங்கா இஸ்லாமிக் போரம் யூகே (SLIF UK) யின் வருடாந்த இஸ்லாமிய மகாநாட்டின் ஒரு பகுதியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நடாத்தப் பட்ட
இந்த சிறுவர் போட்டிகள் , அதன் அமோக வரவேற்பு மற்றும் துரித வளர்ச்சி காரணமாக இவ்வருடம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப் பட்டமையும் போட்டியின்
ஆரம்ப நாள் முதல் இறுதிப் பரிசளிப்பு விழா வரை சகல ஏற்பாடுகளும் மிக
நேர்த்தியாகவும் மிக சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் மிகவும் பாராட்டத்
அமைப்பிலும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததோடு, தேசிய சிறுவர் போட்டிகளின் சகல விபரங்களும் அடங்கிய பிரத்தியேக நினைவு மலர் APLOMB என்ற பெயரில் வெளியிடப்பட்டமையும் இங்கு சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவு மலரில் தொடர்ந்து
போட்டிகளில் கலந்து சிறப்பிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களும் பிள்ளைகளும்
சான்று கூறி இருப்பதைப் பார்க்கும் போது பல்வேறுபட்ட திறமைகளை எமது பிள்ளைகளிடத்தில்
கட்டி எழுப்புவதற்கு இந்த தேசிய சிறுவர் போட்டி மிகவும் கணிசமான பங்களிப்பு
செய்திருப்பதை அறிய முடிகிறது. எதி வரக் கூடிய வருடங்களி
களிலும் எமது சகோதர சகோதரிகள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வார்கள் என உறுதியாக நம்பலாம்.
இந்தப் போட்டியில் ஆர்வமாக கலந்து சிறப்பிக்கும் சிறார்கள் அவர்களின் பெற்றோர்கள்
மற்றும் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல நாயன் தனது அருளை அள்ளிச் சொரிவானாக!
முற்றும்
.
No comments:
Post a Comment